குரு 5 மாசம்.. கொட்டிக் கொடுக்கும் 3 ராசிகள்.. இனிமே உங்களுக்கு தகராறு தான்.. தாண்டவம் உறுதி!
Guru Bhagwan: குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Guru Bhagwan: நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் பயணத்தை தொடங்கினார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்தில் குரு பகவான் நுழைந்தார். வருகின்ற 2025 ஏப்ரல் பத்தாம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார்.
குரு பகவான் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
குருபகவானின் ரோகிணி நட்சத்திர பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. இந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தடைப்பட்டு கடந்த காரியங்கள் உங்களுக்கு வெற்றி விவரமாக இருக்கும் மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
பெரிய இடங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
கடக ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு ஒன்பதாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடும். இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு அதிர்ஷ்ட தேவதை கதவைத்தட்ட போகின்றது. நிதி நிலைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீண்ட காலம் விளக்கு உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்ம ராசி
குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்கள் ராசியில் 11-வது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்து வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு குறையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டவர்கள் சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.