புத்தாண்டு முதல் நாள் சந்திரன் செவ்வாய் சேர்ந்தனர்.. தனயோகத்தில் வாழும் அதிர்ஷ்ட 3 ராசிகள்.. யோகம் வந்தது
Dhana Yoga: சந்திர பகவான் 2025 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அன்று மகர ராசிக்கு சென்றார். அப்போது செவ்வாய் பகவான் இதே ராசியில் ஏழாவது வீட்டில் அமர்ந்திருந்தார். இதனால் சுப மற்றும் தனயோகம் உருவாகியுள்ளது. இந்த மங்கள யோகத்தால் புத்தாண்டு முதல் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.

Dhana Yoga: தற்போது பிறந்துள்ள இந்த 2025 புத்தாண்டு பல முக்கிய கிரகங்கள் இடம் மாறும் ஆண்டாக திகழ்ந்து வருகிறது. இந்த 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மங்கல யோகம் உருவாகக்கூடிய சூழ்நிலைகள் அதிகம் உள்ளது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
Apr 26, 2025 05:00 AMநேர்மை முக்கியம்.. அதிர்ஷ்டத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. இன்று ஏப்.26, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
Apr 25, 2025 09:47 AMபுதாதித்ய யோகம்: வாயை மூடுனா போதும்.. பணம் தானாக கொட்டும் ராசிகள்.. சூரியன் புதன் சேர்க்கை.. உங்கள் ராசி இருக்கா?
நவகிரகங்கள் தளபதியாக திகழ்ந்த வருபவர் செவ்வாய் பகவான். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவர் தன்னம்பிக்கை, தைரியம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நவகிரகங்களின் முக்கிய கிரகமாக கருதப்படக் கூடிய சந்திர பகவான் 2025 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அன்று மகர ராசிக்கு சென்றார். அப்போது செவ்வாய் பகவான் இதே ராசியில் ஏழாவது வீட்டில் அமர்ந்திருந்தார். இதனால் சுப மற்றும் தனயோகம் உருவாகியுள்ளது. இந்த மங்கள யோகத்தால் புத்தாண்டு முதல் ஒரு சில ராசிகள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
ரிஷப ராசி
தனயோகத்தால் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். பல்வேறு விதமான சிக்கல்கள் குறையும். நீண்ட காலமாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு பாராட்டுகளை கொடுப்பார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தருவார்கள்.
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரப் போகின்றது.
விருச்சிக ராசி
இந்த 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் உங்களுக்கு தனயோகம் கிடைக்கப் போகின்றது. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
தொழிலை விரிவுபடுத்தக்கூடிய சூழ்நிலைகள் உங்களுக்கு அமையும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். அதிகம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி
தனயோகத்தால் உங்களுக்கு புத்தாண்டு முதல் பணமழை பொய்யப் போகின்றது அருமையான வாய்ப்பு உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு அனைத்து விதமான வெற்றிகளையும் தேடி கொடுப்பார். வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்கள் உங்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்