Chevvai Peyarchi Palan: பணக்கார வாழ்க்கையை கொடுக்கும் செவ்வாய்.. இந்த ராசிகள் நிலை என்ன?.. ஜோதிட கணிப்பு என்ன சொல்கிறது?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chevvai Peyarchi Palan: பணக்கார வாழ்க்கையை கொடுக்கும் செவ்வாய்.. இந்த ராசிகள் நிலை என்ன?.. ஜோதிட கணிப்பு என்ன சொல்கிறது?

Chevvai Peyarchi Palan: பணக்கார வாழ்க்கையை கொடுக்கும் செவ்வாய்.. இந்த ராசிகள் நிலை என்ன?.. ஜோதிட கணிப்பு என்ன சொல்கிறது?

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 28, 2025 03:40 PM IST

Chevvai Peyarchi Palan: செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் செவ்வாய் பகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Chevvai Peyarchi Palan: பணக்கார வாழ்க்கையை கொடுக்கும் செவ்வாய்.. இந்த ராசிகள் நிலை என்ன?.. ஜோதிட கணிப்பு என்ன சொல்கிறது?
Chevvai Peyarchi Palan: பணக்கார வாழ்க்கையை கொடுக்கும் செவ்வாய்.. இந்த ராசிகள் நிலை என்ன?.. ஜோதிட கணிப்பு என்ன சொல்கிறது?

செவ்வாய் பகவானின் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். செவ்வாய் பகவான் 12 ராசிகளிலும் தனது சுழற்சியை முடித்துக்கொள்ள 22 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் ஜனவரி 21 ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கிறார். 

செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் செவ்வாய் பகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

விருச்சிக ராசி

செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் புதிய முதலீடுகளால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

வேலை செய்யும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி ராசி

செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நல்ல இன்பங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும்.

நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். ஆன்மீகத்தில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய ஆர்வம் உங்களுக்கு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலை விரிவு படுத்த கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

மிதுன ராசி

செவ்வாய் பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் பயணம் செய்வதால் உங்களுக்கு பணவரவு அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்,

பெற்றோர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner