Arthakendra Pongal: குரு பொங்கல் வைத்த செவ்வாய்.. உருவானது அர்த்தகேந்திர யோகம்.. 3 ராசிகள் பணமழை
Arthakendra Pongal: பொங்கல் பண்டிகை திருநாளில் குரு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Arthakendra Pongal: இந்த 2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பிறந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. பல நம்பிக்கைகளோடு பயணம் செய்து கொண்டிருப்பவர்கள் இன்று தை மாதத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த தை மாதம் பல ராசியினருக்கு முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது.
நவகிரகங்களில் குரு பகவான் மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் முக்கியம் வாய்ந்த கிரகங்களாக கருதப்படுகின்றன. குரு பகவான் செல்வத்தின் அதிபதியாகவும், செவ்வாய் பகவான் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையின் அதிபதியாகவும் திகழ்ந்த வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உழவர் திருநாளாக கொண்டாடப்படும். இந்த பொங்கல் பண்டிகை திருநாளில் குரு மற்றும் செவ்வாய் 2 கிரகங்கள் அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
கன்னி ராசி
குரு மற்றும் செவ்வாய் சேர்ந்து கொடுக்கும். அர்த்தகேந்திர யோகம் உங்களுக்கு மிகப்பெரிய பலனை கொடுக்கப் போகின்றது. கஷ்டம் கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். பண மழையில் நனைய போகின்றீர்கள். இந்த நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். தோட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.
மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பனிச்சுமை குறையும். வியாபாரத்தில் விரித்து உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம் ராசி
பொங்கல் திருநாள் முதல் உங்களுக்கு அர்த்தகேந்திர யோகம் வந்துவிட்டது. இதனால் உங்களுக்கு தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். அதிர்ஷ்டம் உங்கள் வீட்டின் கதவை தட்டும் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். திடீரென நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணவரவு அதிகரித்து சேமிப்பு உங்களுக்கு அதிகரிக்கக்கூடும். மன நிறைவு உங்களுக்கு ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த பணிச்சுமை குறையும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பாக்கியம் உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை கிடைக்க கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
கும்ப ராசி
கடின உழைப்பு உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. பொங்கல் திருநாளான இன்று அர்த்தகேந்திர யோகத்தின் ராசியாளர்களாக நீங்கள் உள்ளீர்கள். இதுவரை உங்களுக்கு ஏற்பட்டு வந்த மன வருத்தம் அனைத்தும் நிவர்த்தி அடையும். கவலைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். தொழில் வாழ்க்கையில் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
புதிய வாய்ப்புகள் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உங்களுக்கு அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். உயர அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கக்கூடும். குடும்பத்தினரோடு அதிக நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
