சனி நட்சத்திர பெயர்ச்சி.. புத்தாண்டில் பொங்கி எழப்போகும் 3 ராசிகள்.. பட்டு வாழ்க்கை யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி நட்சத்திர பெயர்ச்சி.. புத்தாண்டில் பொங்கி எழப்போகும் 3 ராசிகள்.. பட்டு வாழ்க்கை யாருக்கு?

சனி நட்சத்திர பெயர்ச்சி.. புத்தாண்டில் பொங்கி எழப்போகும் 3 ராசிகள்.. பட்டு வாழ்க்கை யாருக்கு?

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jan 02, 2025 01:50 PM IST

Lord Sani: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கான எல்லாம்.

சனி நட்சத்திர பெயர்ச்சி.. புத்தாண்டில் பொங்கி எழப்போகும் 3 ராசிகள்.. பட்டு வாழ்க்கை யாருக்கு?
சனி நட்சத்திர பெயர்ச்சி.. புத்தாண்டில் பொங்கி எழப்போகும் 3 ராசிகள்.. பட்டு வாழ்க்கை யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்தார். சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கான எல்லாம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

ரிஷப ராசி

சனி பகவானின் பூரட்டாதி நட்சத்திர இடம் மற்றும் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தந்துள்ளது. பண வரவு அதிகமாகும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம். இருக்கும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினரோடு வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

நிறைய பாராட்டுகளை பெறுவதற்கான வாய்ப்புகள் வேலை செய்யும் இடத்தில் கிடைக்கக்கூடும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

மகர ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை அனைத்தும் வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிரமங்கள் மற்றும் சவால்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கக்கூடும். 

திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிறைய லாபம் கிடைக்கக்கூடிய வியாபாரம் உங்களுக்கு அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகரீதியாக உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிக ராசி

சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு இன்பத்தை அள்ளி கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வணிகத்தில் நிறைய லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு தேடி வரும். வாழ்க்கை தரம் உங்களுக்கு உயரும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.