Danger Rasis: இயற்கையிலேயே அமைதியான ஆபத்தாக இருக்கக் கூடிய ராசிகள்
2024 horoscope: பிறப்பிலேயே அமைதியான முகத்தைக் காட்டி ஆபத்தாக இருக்கக்கூடிய ராசிகளை காண்போம்.

புது வருடம் தொடங்கி பயணத்தை மேற்கொண்டு வருகிறது இந்த ஆண்டு 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்து வருகிறது. இந்த ஆண்டு பல கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுகின்றனர். இதனால் 12 ராசிகளுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்பட உள்ளன.
ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இருப்பினும் ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஏதோ ஒரு கிரகத்தை அதிபதியாக கொண்டு செயல்படுவார்கள். அந்த கிரகங்களுக்கு ஏற்றவாறு அந்தந்த ராசிக்காரர்கள் அடிப்படை குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள்.
அந்த வகையில் அமைதியான வெளித்தோற்றத்தை கொண்டு மிகவும் ஆபத்தாக இருக்கக்கூடிய சில ராசிக்காரர்கள் உள்ளனர். வெளியே பார்க்கும்போது அமைதியாகவும் திடீரென ஆபத்தானவர்களாக மாறக்கூடிய குணங்கள் கொண்ட ராசிக்காரர்கள் இங்கே காண்போம்.
விருச்சிக ராசி
குரு பகவானின் சுந்தர் ராசியான நீங்கள் எப்போதும் மர்மமான குணாதிசயத்தை இயல்பாக கொண்டிருப்பீர்கள். அமைதியை எப்போதும் வெளிப்படுத்தக்கூடிய நீங்கள் அனைவரையும் வசீகரிக்க கூடிய இயல்பு கொண்டவர்கள். இருப்பினும் உள்ளே மிகவும் ஆபத்தான இயல்பை நீங்கள் கொண்டிருப்பீர்கள். அதிக உள்ளுணர்வு கொண்டு செயல்பட கூடியவர்கள். நீங்கள் எளிதில் அனைவரையும் கணிக்க கூடிய திறன் உங்களிடம் உள்ளது. தேவையான நேரத்தில் உங்கள் சக்திகளை காட்ட தயங்க மாட்டீர்கள்.
மீன ராசி
நீரின் அடையாளமாக விளங்கக்கூடிய நீங்கள் எப்போதும் மற்றவர்களிடத்தில் மென்மையாகவும், கனிவாகவும் நடந்து கொள்ளக் கூடியவர்கள். ஆனால் உங்களிடம் அதீத சக்தி ஆழ்மனதில் மறைந்து இருக்கின்றது. கற்பனையை வெளிப்படுத்தக்கூடிய திறன் உங்களிடம் இருந்தாலும் மிகவும் அமைதியாக செயல்பட கூடியவர்கள். நீங்கள் உங்களை கடுமையாக தூண்டும் பொழுது உங்களுடைய ஆபத்தான பக்கம் தானாக வெளிவரும்.
கன்னி ராசி
அனைத்தையும் பகுத்துப் பார்த்து தெளிவாக சிந்தித்து செயல்படக் கூடியவர்கள். நீங்கள் இயல்பிலேயே மிகவும் அமைதியான மனநிலை கொண்டிருந்தாலும் அதீத வலிமை கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள். அனைத்தையும் உன்னிப்பாக கவனித்து மற்றவர்களின் பலவீனங்களை எளிதாக அடையாளம் காண்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவதில் உங்களுக்கு வல்லவர் நீங்கள் மட்டுமே. வலிமையான எதிரியாக இருந்தாலும் அமைதியாக கையாண்டு தேவையான நேரத்தில் உங்களுடைய ஆபத்தான முகத்தை அவர்களிடம் காட்டுவீர்கள்.
மகர ராசி
அசைக்க முடியாத மன உறுதி கொண்டவர்கள் ஆக நீங்கள் திகழ்ந்து வருகிறீர்கள். லட்சியத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வீர்கள். ஆனால் நீங்கள் பயணிக்கும் பயணத்தை யாராலும் கணிக்க முடியாது. அந்த அளவிற்கு மிகவும் அமைதியாக செல்லக் கூடியவர்கள் ஒழுக்கமான இயல்பு உங்களுக்கு அடிப்படையிலேயே உள்ளது. மிகவும் அமைதியாக வேலை செய்து உங்கள் இலக்கத்தின் மீது கவனம் செலுத்தி வெற்றி காண்பீர்கள். உங்களிடம் மோதிப் பார்க்கும் பொழுது நீங்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என எதிரிகள் புரிந்து கொள்வார்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
