இந்த ராசி பெண்கள் கல்யாணம் பண்ண துடிப்பாங்க.. அதுலயே குறி இருக்கும்.. ஆசைப்படும் பெண்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  இந்த ராசி பெண்கள் கல்யாணம் பண்ண துடிப்பாங்க.. அதுலயே குறி இருக்கும்.. ஆசைப்படும் பெண்கள்!

இந்த ராசி பெண்கள் கல்யாணம் பண்ண துடிப்பாங்க.. அதுலயே குறி இருக்கும்.. ஆசைப்படும் பெண்கள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jun 02, 2025 02:00 PM IST

இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் இளம் வயதிலேயே திருமண வாழ்க்கை மீது அதிக ஈடுபாடோடு இருப்பார்கள் என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

இந்த ராசி பெண்கள் கல்யாணம் பண்ண துடிப்பாங்க.. அதுலயே குறி இருக்கும்.. ஆசைப்படும் பெண்கள்!
இந்த ராசி பெண்கள் கல்யாணம் பண்ண துடிப்பாங்க.. அதுலயே குறி இருக்கும்.. ஆசைப்படும் பெண்கள்!

இது போன்ற போட்டோக்கள்

கிரகங்களின் அடிப்படையில் ஒரு சில ராசிகள் ஒரு சில அம்சத்தோடு பிறந்திருப்பார்கள். அந்த வகையில் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசியில் பிறந்த பெண்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள அதிகம் ஆசைப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த ராசிகளில் பிறந்த பெண்கள் இளம் வயதிலேயே திருமண வாழ்க்கை மீது அதிக ஈடுபாடோடு இருப்பார்கள் என கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கடக ராசி

உங்கள் ராசியை ஆளும் நாயகனாக சந்திரன் விளங்கி வருகின்றார் குடும்பம் மற்றும் உணர்ச்சி பாதுகாப்பாக ஆழமாக இணைக்கப்பட்டுள்ள ராசிகளில் நீங்களும் ஒருவர். இயற்கையாகவே உங்களுக்கு மற்றவர்கள் மீது அக்கறை காட்டும் குணம் அதிகம் என கூறப்படுகிறது. சிறு வயதிலிருந்து நிலையான அன்பு மற்றும் புதிய குடும்பத்தை உருவாக்கக்கூடிய எண்ணம் உங்களுக்கு இருக்கும் என கூறப்படுகிறது. இளம் வயதிலேயே அனைத்து மகிழ்ச்சிகளையும் அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

அதன் காரணமாக இளம் வயதில் திருமண வாழ்வில் ஈடுபட்டு விடுவார்கள் என கூறப்படுகிறது. தங்களுக்கு பிடித்த நபர்களோடு அழகான வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என நினைக்கக் கூடியவர்கள். அதுதான் மிக முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

துலாம் ராசி

சுக்கிர பகவானால் ஆளப்படும் ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர் இந்த ராசியில் பிறந்த பெண்கள் உறவுகளில் செலுத்து வாழ்வார்கள் என கூறப்படுகிறது. தங்கள் வாழ்க்கையை மற்றவர்களோடு மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்ள விரும்பக் கூடியவர்கள் என கூறப்படுகிறது. எப்போதும் வாழ்க்கையை சமநிலை மற்றும் தோழமையோடு வழிநடத்த விரும்பக் கூடியவர்கள்.

அதன் காரணமாகவே விரைவில் திருமண வாழ்க்கை அமைய வேண்டுமென ஆசைப்படுவார்கள். பாதுகாப்பான வாழ்க்கையை விரும்புகின்ற காரணத்தினால் இவர்கள் இளம் வயதிலேயே திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையில் வசதிகளை அதிகம் விரும்பக்கூடிய ராசிகளாக நீங்கள் திகழ்ந்து வருகின்றீர்கள். அதற்காக பொறுமையோடு நீங்கள் செயல்படுவீர்கள் எனக் கூறப்படுகிறது.

ரிஷப ராசி

காதலன் கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவானால் ஆளப்படும் ராசிக்காரர்களின் நீங்களும் ஒருவர். மன உறுதி மற்றும் விசுவாசம் காதலில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்களாக நீங்கள் விளங்கி வருகின்றீர்கள். நீண்டகால உறவுக்கு பெயர் பெற்றவர்களாக நீங்கள் விளங்கி வருவதாக கூறப்படுகிறது. ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் திருமண வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய பாதுகாப்பை அதிகம் விரும்புவார்கள் என கூறப்படுகிறது. ஆழ்ந்த உணர்ச்சி இணைப்போடு இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் எப்போதும் முழு மனதோடு காதல் வாழ்க்கையில் ஈடுபட விரும்புவார்கள்.

அதனால் இளம் வயதிலேயே திருமண பந்தத்தில் இணைவதற்கான வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என கூறப்படுகிறது. வாழ்க்கை துணையோடு சேர்ந்து நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் இவர்கள் எப்போதும் மகிழ்ச்சி கொள்கிறார்கள் என கூறப்படுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.