அவமானங்களை சந்திப்பது உறுதி.. யாரும் மதிக்க மாட்டாங்க.. இந்த பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.. சாணக்கிய நீதி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அவமானங்களை சந்திப்பது உறுதி.. யாரும் மதிக்க மாட்டாங்க.. இந்த பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.. சாணக்கிய நீதி

அவமானங்களை சந்திப்பது உறுதி.. யாரும் மதிக்க மாட்டாங்க.. இந்த பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.. சாணக்கிய நீதி

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 04, 2025 01:53 PM IST

Chanakya Niti: மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால் சில பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என சாணக்கிய நீதி கூறுகிறது. அப்படி நமது தரத்தை உயர்த்தக்கூடிய சாணக்கியரின் அறிவுரையை இங்கே காண்போம்.

அவமானங்களை சந்திப்பது உறுதி.. யாரும் மதிக்க மாட்டாங்க.. இந்த பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.. சாணக்கிய நீதி
அவமானங்களை சந்திப்பது உறுதி.. யாரும் மதிக்க மாட்டாங்க.. இந்த பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.. சாணக்கிய நீதி

சாணக்கியர் கூறும் நீதியில் இன்று வரை வாழ்க்கையோடு ஒத்துப் போகக்கூடிய தத்துவங்கள் எத்தனையோ உள்ளது. குறிப்பாக சாணக்கியர் தனது நீதி நூலில் மரியாதை மற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து அதிகமாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் ஒருவரின் தீய பழக்க வழக்கங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் மற்றும் நிதி நெருக்கடியையும் கொடுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் நமது வாழ்க்கையில் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும் என்று நினைத்தால் சில பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என சாணக்கியர் நீதி கூறுகிறது. அப்படி நமது தரத்தை உயர்த்தக்கூடிய சாணக்கியரின் அறிவுரையை இங்கே காண்போம்.

எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.

சோம்பேறித்தனம்

வாழ்க்கையில் மற்றவர்களிடம் மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என விரும்பினால் நீங்கள் ஒருபோதும் சோம்பேரிகளாக இருக்கக்கூடாது. சோம்பேறிகள் நிதி ஆதாயங்கள் மூலம் வருகின்ற வாய்ப்புகளை இழக்கின்றார்கள் எதிர்காலத்தில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். சோம்பேறிகள் எப்போதும் மற்றவர்களால் மதிக்கப்படுவது கிடையாது என சாணக்கியர் கூறுகிறார் .

தூய்மை இல்லா வாழ்க்கை 

சாணக்கிய நீதிபதி சுகாதாரமற்ற வாழ்க்கையை வாழக்கூடியவர்கள் எதிர்மறை ஆற்றலை உருவாக்கக் கூடியவர்கள் என கூறுகிறது. இவர்களுக்கு லட்சுமி தேவியின் அருள் ஒருபோதும் கிடைக்காது. எனவே தங்கள் வாழ்க்கை சூழலில் அதிகம் சுகாதாரத்தை பேண வேண்டும். தூய்மையற்ற சூழ்நிலையை உருவாக்கி வாழக்கூடியவர்களை அனைவரும் ஒதுக்குவார்கள் என சாணக்கிய நீதி கூறுகிறது.

பேராசை

நமது வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்கக்கூடிய கருவியாக பேராசை விளங்கி வருகின்றது. சாணக்கிய நீதி கூறுவது படி ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்கள் அனைத்தையும் பேராசை விளக்க செய்கின்றது. கடுமையான உழைப்பின் மூலமே ஒருவர் முன்னேற்றத்திற்கான வேண்டும். பேராசை ஏற்பட்டால் மோசடியான வழிகளில் பணம் சம்பாதிக்கக்கூடிய சூழல்கள் உண்டாகும். அப்படி இருப்பவர்கள் எப்போதும் மக்களிடத்தில் ஒதுக்கப்பட்ட காணப்படுவார்கள் என சாணக்கிய நீதி கூறப்படுகிறது.

கெட்ட பழக்க வழக்கங்கள்

நமது வாழ்க்கையில் தங்களிடம் இருக்கும் குறைபாடுகளை மறந்து விட்டு மற்றவர்களின் குறைகளை பரப்புவது சமூகத்தில் அவமரியாதையை உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் என சாணக்கிய நீதி கூறுகிறது. மற்றவர்களைப் பற்றி எப்போதும் தவறாக பேசி அதனை பரப்புவது வெகுஜன கூட்டத்திலிருந்து உங்களை விலக்கி வைக்கும். எனவே உங்களுக்கு தெரியாமல் கூட யாரைப் பற்றியும் யாரிடமும் தவறாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.

பொய் பேசுவது

சாணக்கிய நீதியில் முதன்மையாக கருதப்படும் அறிவுரையாக திகழ்வது உண்மை கூறுவது. மற்றவர்களிடத்தில் நமது மரியாதையை சீர்குலைக்கும் பழக்கமாக பொய் சொல்லும் பழக்கம் இருந்து வருகிறது. பொய் கூறுவதை மற்றவர்கள் கண்டுபிடித்து விட்டால் நீங்கள் எது கூறினாலும் அதனை யாரும் நம்ப மாட்டார்கள். பொய் கூறுவதால் உங்களுடைய நேர்மையை நீங்கள் இழந்து விடக்கூடும். எனவே யாரிடமும் தவறுதலாக கூட பொய் கூறாமல் இருப்பதில் நீங்கள் உறுதிய ஏற்றுக் கொள்ளுங்கள் என சாணக்கிய நீதி கூறுகிறது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Whats_app_banner