Thirunavukkarasar Nayanar: அற்புதங்களை நிகழ்த்திய அப்பர்.. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்.. ஆசி வழங்கிய சிவபெருமான்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Thirunavukkarasar Nayanar: அற்புதங்களை நிகழ்த்திய அப்பர்.. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்.. ஆசி வழங்கிய சிவபெருமான்!

Thirunavukkarasar Nayanar: அற்புதங்களை நிகழ்த்திய அப்பர்.. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்.. ஆசி வழங்கிய சிவபெருமான்!

Suriyakumar Jayabalan HT Tamil
Published Apr 13, 2025 06:00 AM IST

Thirunavukkarasar Nayanar: சிவபெருமானின் புகழை தமிழால் எடுத்துரைத்து சிவ தொண்டர்களாக வாழ்ந்தவர்கள் தான் 63 நாயன்மார்கள். அதில் ஒருவர் தான் அப்பர் என அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார்.

Thirunavukkarasar Nayanar: அற்புதங்களை நிகழ்த்திய அப்பர்.. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்.. ஆசி வழங்கிய சிவபெருமான்!
Thirunavukkarasar Nayanar: அற்புதங்களை நிகழ்த்திய அப்பர்.. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்.. ஆசி வழங்கிய சிவபெருமான்!

இது போன்ற போட்டோக்கள்

அதன் காரணமாக நூல்களில் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று வழிபாடு செய்து வருகின்றனர். சைவ மதத்தை பின்பற்றி எத்தனையோ தொண்டர்கள் சிவபெருமானின் புகழை உலகம் முழுவதும் பரப்பி வந்தனர்.

அதில் குறிப்பாக சிவபெருமானின் புகழை தமிழால் எடுத்துரைத்து சிவ தொண்டர்களாக வாழ்ந்தவர்கள் தான் 63 நாயன்மார்கள். அதில் ஒருவர் தான் அப்பர் என அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார்.

திருநாவுக்கரசு நாயனார்

அப்பர் என அழைக்கப்படும் திருநாவுக்கரசு நாயனார் ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில் நமது தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர். பலரும் பலவிதமாக தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் போது அப்பர் மட்டும் தொண்டாற்றி தனது பக்தியை வெளிப்படுத்தினார்.

முதன்முதலில் நமது தமிழ்நாட்டில் சிவபெருமான் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியது அப்பர் தான். திருஞானசம்பந்தர் இவரை அப்பர் என்று அழைத்த காரணத்தினால் இவருக்கு இந்த பெயர் வந்தது. நாவுக்கரசர் எனவும் இவர் அறியப்பட்டுள்ளார்.

திருநாவுக்கரசர் பிறப்பு

சோழநாட்டில் திருமுனைப்பாடி பகுதியில் இருந்த அதாவது கடலூர் மாவட்டத்தில் திருவாமூர் என்ற ஊரில் புகழனார், மாதினியார் என்ற தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் மருணீக்கியார். இவருடைய இளமை காலத்தில் சைவ சமயத்தை விட்டு விட்டு சமண சமயத்தில் புகுந்து தன்னை மாற்றிக் கொண்டார். சமரசம் நூல்களை கற்று அந்த மதத்தின் தலைவராகவும் திகழ்ந்து வந்தார். அதனால் இவரை தர்மசேனர் என அனைவரும் அழைத்துள்ளனர்.

அப்பரின் அக்காவான திலகவதி. மிகப்பெரிய சிவபெருமான் பக்தராக திகழ்ந்து வந்துள்ளார். தன்னுடைய தம்பி அப்பர் சமண சமயத்தில் இருப்பதை எண்ணி வருத்தப்பட்டு இறைவனிடத்தில் முறையிட்டார். அந்த காலகட்டத்தில் அப்பருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சமண மடத்தில் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கவில்லை.

அவருடைய அக்கா திலகவதி ஆலோசனைப்படி சிவபெருமானை பாராட்டி பாடல் ஒன்றை பாடியுள்ளார். அந்தப் பாடலால் அவருடைய நோய் தீர்ந்துள்ளது. அதற்குப் பிறகு சைவ சமயத்தில் புகுந்து நாவுக்கரசராக மாறினார். பல்வேறு சிவபெருமான் கோயில்களுக்கு சென்று பல தேவார பதிகங்களை அப்பர் பாடியுள்ளார். அந்த கோயில்களை தூய்மை செய்யும் பணியையும் அவரே செய்துள்ளார். அதனை உழவாரப்பணி என்று சைவர்கள் அழைத்துள்ளனர்.

முதல் முதலில் சிவபெருமான் கோயில்களில் உழவாரப் பணியை செய்த காரணத்தினால், அப்பர் உழவாரத் தொண்டர் என அழைக்கப்பட்டுள்ளார். இறைவனை தொண்டு வழியிலும் வழிபாடு செய்யலாம் என்பதை உணர்த்தியது இவர்தான்.

மகேந்திர பல்லவன்

சமண சமயத்தை சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசருக்கு பல்வேறு விதமான துன்பத்தை கொடுத்துள்ளார். இறைவனின் அருளால் திருநாவுக்கரசர் அதனை வென்றுள்ளார். அப்பருக்கு இறைவனின் ஆசி இருப்பதை கண்டு வியந்த மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தை தழுவியுள்ளார்.

திருஞானசம்பந்தரோடு சேர்ந்து திருநாவுக்கரசர் பல தல யாத்திரைகளை செய்துள்ளார். போதுதான் திருஞானசம்பந்தர் அவரை அப்பர் என அழைத்துள்ளார். திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள் திருமறைகளில் 4, 5, 6 ஆக வகுக்கப்பட்டுள்ளன. திருநாவுக்கரசர் 49,000 தேவாரப் பதிகங்களை பாடியுள்ளார் எனக் கூறப்படுகிறது. சிவபெருமானுக்கு துண்டு புரிந்த திருநாவுக்கரசர் தனது 81 வது வயதில் திருப்புகலூரில் இறைவனோடு கலந்தார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

Suriyakumar Jayabalan

TwittereMail
ஜெ. சூரியகுமார், 2019ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இளங்கலை வணிகவியல், இதழியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் ஆன்மீகம், சினிமா, புகைப்படத்தொகுப்பு, வீடியோ சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். இசை கேட்பது, கவிதை எழுதுவது, ஓவியம் வரைதல் இவரது பொழுது போக்கு
Whats_app_banner