HT Yatra: அருணகிரிநாதருக்கு வழிகாட்டி.. வசந்தம் தரும் விராலிமலை முருகன்
அருள்மிகு விராலிமலை முருகன் கோயில் வரலாறு குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ஆறுமுகன் இருந்தால் சகல புண்ணியமும் கிடைக்கும் என முன்னோர்கள் கூறுவது உண்டு அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் தனக்கென சிறப்பு தளங்கள் கொண்டு பக்தர்களை அருள் பாலித்த வருகிறார் முருகப்பெருமான் அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தமிழ் மக்களால் வழிபாடு செய்யப்பட்டு போற்றப்பட்டு வருகிறார்.
எத்தனையோ சிறப்பு பெற்ற தலங்கள் முருக பெருமானுக்கு இருக்கின்றன அப்படிப்பட்ட தலங்களில் ஒன்றுதான் விராலிமலை முருகன் கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடிய தளமாக விளங்கி வருகிறது இந்த விராலிமலை முருகன் கோயில்.
அனைத்து கோயில்களிலும் இல்லாமல் இந்த கோயிலில் தனி சிறப்பு என்னவென்றால் இங்கு உள்ள முருக பெருமானுக்கு சுருட்டு நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இந்த கோயிலில் வீற்றெடுக்கக்கூடிய முருக பெருமானை வழிபட்டால் குழந்தை மற்றும் திருமண பாக்கியங்கள், மன அமைதி உள்ளிட்டவைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் முருக பெருமானுக்கு இருக்கக்கூடிய பிரார்த்தனை தலங்களில் இது மிகப்பெரிய முக்கிய தலமாக விளங்கி வருகிறது. அனைத்து முருகன் கோயில்களிலும் செய்யப்படும் பிரார்த்தனை, நேர்த்திக் கடன் உள்ளிட்டவைகள் அனைத்தும் இந்த கோயிலிலும் செய்யப்படும்.
தல வரலாறு
தற்போது கோயில் இருக்கக்கூடிய இடத்தில் அந்த காலத்தில் குரா மரம் இருந்துள்ளது. அப்போது அங்கு இருந்த வேங்கை ஒன்றை வேடன் ஒருவன் பார்த்துவிட்டு விரட்டி வருகிறார் ஓடிவந்த வேங்கை குரா மரம் வந்ததும் காணாமல் மறைந்துள்ளது. இதனைக் கண்ட வேடன் ஆச்சரியப்பட்டுள்ளார். அங்கு இறைவன் இருப்பதாக நினைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.
வயலூரில் இருந்த அருணகிரிநாதரை முருகப்பெருமான் விராலி மலைக்கு வரும்படி கூறியுள்ளார். விராலி மலைக்கு வந்த அருணகிரிநாதர் முருகன் இருக்கும் இடம் தெரியாமல் தவித்து வந்துள்ளார். உடனே வேடன் ரூபத்தில் வந்த முருக விராலிமலை பகுதிக்கு அருணகிரிநாதனிடம் வலி கூறிவிட்டு விராலிமலை வந்ததும் மறைந்து விடுகிறார். அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் வழி கூறிய தலம் என்பதால் இது மிகவும் சிறப்பு பெற்ற தலமாக விளங்கி வருகிறது.
அருணகிரிநாதரின் திருப்புகழில் 18 முறை இந்த திருக்கோவில் குறித்து கூறியுள்ளார் என்று கூறினால் விராலிமலை முருகப்பெருமான் அவருக்கு எவ்வளவு சிறப்பு என்பது பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்த விராலிமலை திருக்கோயிலில் வள்ளி திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது அதில் சமயம் இந்த கோவிலில் முருகப்பெருமான் 10 அடி உயரத்தில் இருப்பது மேலும் சிறப்பாக கூறப்படுகிறது.
செல்லும் இடம்
இந்த திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. புதுக்கோட்டையில் இருந்து 41 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சியில் இருந்து 34 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9