தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Rahu: கட்டி வைத்து கதற வைக்கும் ராகு.. டிசம்பர் வரை முரட்டு அடி உறுதி.. கண்ணீரில் மிதக்கும் ராசிகள்

Lord Rahu: கட்டி வைத்து கதற வைக்கும் ராகு.. டிசம்பர் வரை முரட்டு அடி உறுதி.. கண்ணீரில் மிதக்கும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 22, 2024 01:34 PM IST

Lord Rahu: ராகு பகவானின் பயணம் சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. ராகு பகவானின் மீன ராசி பயணத்தால் இந்த ஆண்டு முழுவதும் மூன்று ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர்.

கட்டி வைத்து கதற வைக்கும் ராகு.. டிசம்பர் வரை முரட்டு அடி உறுதி.. கண்ணீரில் மிதக்கும் ராசிகள்
கட்டி வைத்து கதற வைக்கும் ராகு.. டிசம்பர் வரை முரட்டு அடி உறுதி.. கண்ணீரில் மிதக்கும் ராசிகள்

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இருக்கும் இடத்தை பொறுத்து ராகு பகவான் பல ராசிகளுக்கு நன்மைகள் மற்றும் தீமைகளை தரம் பிரித்து செய்து கொடுப்பார்.

கன்னி ராசி

ராகு பகவானின் பயணம் சில ராசிகளுக்கு நன்மைகளை கொடுத்தாலும் சில ராசிகளுக்கு மோசமான சூழ்நிலைகள் உருவாகி உள்ளது. ராகு பகவானின் மீன ராசி பயணத்தால் இந்த ஆண்டு முழுவதும் மூன்று ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு கஷ்டமான சூழ்நிலை உருவாகத்திற்கு அதிக வாய்ப்பு உள்ளது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

தொழில் மந்தமாக இருக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் மன கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

தனுசு ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும். 

டிசம்பர் மாதம் வரை பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். அதிக வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்தாலும் வெற்றி அடைவதற்கு சற்று தாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அதிகம் உள்ளது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை உண்டாகும். 

நிதி நிலைமையில் கஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் விடும்போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel