Shani: சனி நவம்பர் சுழலில் சிக்கிய ராசிகள்.. குடும்பத்தில் சண்டை.. தொழிலில் சிக்கல்.. அனைத்து சங்கடங்களும் வரும்
Lord Shani: கடந்த ஜூன் 29ஆம் தேதி என்று சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார் வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சங்கடத்தை கொடுக்கப் போகின்றது.

Shani: நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் வழங்கி வருகின்றார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.
சனி பகவான் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். இதனால் கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனிபகவான் தற்போது தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கட்டாயம் ஏற்படுத்தும். இந்த ஆண்டு முழுவதும். இதே ராசியில் பயணம் செய்வார். சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி என்று சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டார் வருகின்ற நவம்பர் மாதம் வரை இதே நிலையில் பயணம் செய்வார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சங்கடத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படும். எடுத்துக் கொண்ட காரியங்கள் முடிவதற்கு சற்று தாமதமாகும். காரிய தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு வெற்றி கிடைத்தாலும் அது நிலைக்காது.
கடின உழைப்பு கூட உங்களுக்கு பெரிய முன்னேற்றத்தை பெற்று தராது. வியாபாரம் மந்தமாக இருக்கும் தொழிலில் கடுமையான போட்டி இருக்கும். அவ்வப்போது நஷ்டங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் 11-ஆவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைப்பதில் சற்று தாமதமாகும். எடுத்துக் கொண்ட வேலைகளில் தடைகள் அவ்வப்போது ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு கடினமான சூழ்நிலை உண்டாகும்.
நிதி நிலைமையில் பலவீனமான சூழ்நிலை இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் சிரமமான சூழ்நிலை ஏற்படும். பழக்கவழக்கங்களால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மிதுன ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எடுத்துக்கொண்ட காரியங்கள் முடிவதற்கு சட்ட தாமதமாகும். நவம்பர் மாதம் வரை உங்களுக்கு கடுமையான சூழ்நிலை இருக்கும்.
வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பிடிக்காத இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய காரியங்களை தள்ளிப் போடுவது நல்லது. அவசரப்பட்டு எந்த காரியத்திலும் இறங்காமல் இருப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
