கோடி கோடியாய் கொட்டும்.. அக்டோபர் மாதம் குறிவைத்த புதன்.. பணத்தில் இந்த ராசிகள் விளையாட்டு.. நீங்க என்ன ராசி
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கோடி கோடியாய் கொட்டும்.. அக்டோபர் மாதம் குறிவைத்த புதன்.. பணத்தில் இந்த ராசிகள் விளையாட்டு.. நீங்க என்ன ராசி

கோடி கோடியாய் கொட்டும்.. அக்டோபர் மாதம் குறிவைத்த புதன்.. பணத்தில் இந்த ராசிகள் விளையாட்டு.. நீங்க என்ன ராசி

Suriyakumar Jayabalan HT Tamil
Published Oct 05, 2024 02:54 PM IST

zodiac signs: ஒரே மாதத்தில் இரண்டு முறை புதன் பகவான் இடமாற்றம் செய்வது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கோடி கோடியாய் கொட்டும்.. அக்டோபர் மாதம் குறிவைத்த புதன்.. பணத்தில் இந்த ராசிகள் விளையாட்டு.. நீங்க என்ன ராசி
கோடி கோடியாய் கொட்டும்.. அக்டோபர் மாதம் குறிவைத்த புதன்.. பணத்தில் இந்த ராசிகள் விளையாட்டு.. நீங்க என்ன ராசி

இது போன்ற போட்டோக்கள்

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

இந்நிலையில் புதன் பகவான் இந்த அக்டோபர் மாதத்தில் இரண்டு முறை இடமாற்றம் செய்ய உள்ளார். வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி அன்று புதன் பகவான் ரிஷப ராசிக்கு செல்கிறார். அதற்குப் பிறகு இரண்டாவது முறையாக அக்டோபர் மாதம் 29ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்கு செல்கிறார். ஒரே மாதத்தில் இரண்டு முறை புதன் பகவான் இடமாற்றம் செய்வது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

துலாம் ராசி

புதன் பகவான் இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். பணவரவு பொருத்தவரை உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களை ஈர்க்கும் வகையில் உங்களுடைய செயல்பாடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

விருச்சிக ராசி

புதன் பகவானின் பயணமானது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கக்கூடும். பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். பணத்தை நிறைய சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். 

திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு கிடைக்கும் தொழில் நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும்.

மகர ராசி

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மாநிலத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். 

புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.