தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  King Rasis: சம்பவத்தை உறுதி செய்த செவ்வாய்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?

King Rasis: சம்பவத்தை உறுதி செய்த செவ்வாய்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jul 08, 2024 12:58 PM IST

King Rasis: ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

சம்பவத்தை உறுதி செய்த செவ்வாய்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?
சம்பவத்தை உறுதி செய்த செவ்வாய்.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ராசிகள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?

King Rasis: நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய ஏமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் இடமாற்றம் நன்மைகள் மற்றும் தீமைகளை இருக்கும் இடத்தை பொறுத்து கிடைக்கும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.

அந்த வகையில் தற்போது தனது சொந்தமான ராசிக்கான மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் செவ்வாய் பகவான் வருகின்ற ஜூலை 12-ம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார்.

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். ரிஷப ராசியில் செவ்வாய் பகவான் நுழைகின்ற காரணத்தினால் இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பயணம் செய்யப்போகின்றார். எதனால் உங்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முழுமையற்ற வேலைகள் நிறைவாக முடிவடையும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். கூட்டு வியாபாரம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

கும்ப ராசி

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வசதிகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிக ஆர்வத்துடன் கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதிநிலைமை பலமாகவும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாகும். சிக்கி கிடந்த பணம் உங்களை வந்து சேரும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். சம்பாதித்த பணத்தை சேமிக்க கூடிய சூழ்நிலைகள் அமையும். 

தைரிய செயல்பாடுகளால் உங்களுக்கு அனைத்தும் வெற்றியாக முடிவடையும். பேச்சு திறமையால் காரியங்கள் வெற்றி அடையும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9