Rahu: வேட்டு வைத்து வெடிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்டும் ராகு.. அரியணை யாருக்கு பார்க்கலாம்?-let us tell you about the zodiac signs that are going to receive income from lord rahu - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu: வேட்டு வைத்து வெடிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்டும் ராகு.. அரியணை யாருக்கு பார்க்கலாம்?

Rahu: வேட்டு வைத்து வெடிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்டும் ராகு.. அரியணை யாருக்கு பார்க்கலாம்?

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 30, 2024 04:27 PM IST

Lord Rahu: ராகு பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Rahu: வேட்டு வைத்து வெடிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்டும் ராகு.. அரியணை யாருக்கு பார்க்கலாம்?
Rahu: வேட்டு வைத்து வெடிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்டும் ராகு.. அரியணை யாருக்கு பார்க்கலாம்?

ராகு மற்றும் கேது எப்போதும் இணை பிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். அந்த வகையில் ராக பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் தனது பயணத்தை மேற்கொள்கிறார்.

ராகு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து தராத பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ராகு பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

கும்ப ராசி

ராகு பகவான் நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். உங்களுக்கு ராகு பகவான் ஆசீர்வாதம் செய்வார். பணவரவில் எந்த குறையும் இருக்காது. பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். 

தொழில் மற்றும் வியாபார வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் கல்விகளை திறந்து விளங்குவார்கள். கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மகர ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் பணவரவு ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். 

குடும்பத்தில் உங்களுக்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். சரியான வாய்ப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

துலாம் ராசி

ராகு பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் திருப்தியை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வாழ்க்கையில் உங்களுக்கு அனைத்து சிக்கல்களும் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். 

குடும்பத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட கால சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். கடன் சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். கடன் உதவியால் உங்களுக்கு வியாபாரம். மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner