குரு.. விரட்டி விரட்டி கொட்டுவது உறுதி.. வக்கிர நிலை பணமழை ராசிகள்.. தீயா வேலை செய்யும்
Guru Bhagavan: குரு பகவானின் வக்கிர நிலையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பண பலன்களை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், தைரியம், தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
Apr 27, 2025 02:11 PMமே மாதத்தில் அரிய புதாதித்ய ராஜயோகம்.. அதிர்ஷடம் காத்திருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள்
Apr 27, 2025 07:30 AMராகு குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி பொங்கப் போகும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 27, 2025 05:00 AMலாபமும் மகிழ்ச்சியும் தேடி வரும் யோகம் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்.. இன்று உங்க நாள் எப்படி இருக்கு பாருங்க!
Apr 26, 2025 11:26 AMபண கட்டிலில் படுத்து உருளும் ராசிகள்.. சூரியன் அஸ்வினியில் நுழைகிறார்.. தமிழ் புத்தாண்டு ராசிகள்!
Apr 26, 2025 06:30 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன் புதன் சேர்க்கை.. விடாமல் பணமழை கொட்டப் போகும் ராசிகள்
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் குரு பகவான் ரிஷப ராசியில் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று வக்கிர நிலையில் தனது பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு 119 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார். குரு பகவானின் வக்கிரநிலையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பண பலன்களை அதிகப்படுத்தி கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
ரிஷப ராசி
குரு பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை பெற்று தரும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. யோகத்தின் பலன்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
சிம்ம ராசி
குருபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு யோக பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல லாபம் கிடைக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
உடன் வேலை செய்பவர்களின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். கடின உழைப்பு சிறப்பான பலன்களை பெற்றுத் தரும்.
கடக ராசி
உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குருபகவான் வக்கிர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேறுவதற்கான சூழ்நிலைகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு எப்போதும் உதவியாக இருப்பார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்