தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அஸ்தமனத்தில் அதிரடி காட்டும் புதன்.. பணப்பாதையில் நடக்கும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு யோகம் வருகுது

அஸ்தமனத்தில் அதிரடி காட்டும் புதன்.. பணப்பாதையில் நடக்கும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு யோகம் வருகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 20, 2024 05:39 PM IST

Lord Mercury: புதன் பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலையின் போது கிரகங்கள் பலவீனமான நிலையில் இருப்பார்கள். இதனால் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதன் பகவானின் அஸ்தமனத்தால் மூன்று ராசிகள் யோகத்தை பெறுகின்றனர்.

அஸ்தமனத்தில் அதிரடி காட்டும் புதன்.. பணப்பாதையில் நடக்கும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு யோகம் வருகுது
அஸ்தமனத்தில் அதிரடி காட்டும் புதன்.. பணப்பாதையில் நடக்கும் ராசிகள்.. 3 ராசிகளுக்கு யோகம் வருகுது

Lord Mercury: நவக்கிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

நவகிரகங்களோடு ஒப்பிடும்போது புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். அடிக்கடி தனது நிலையை மாற்றிக் கொண்டே இருப்பார். அதனால் அவருடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.