Chanakya Niti: இளமை காலத்தில் இந்த தவறுகளை பண்ணாதீங்க.. சாணக்கிய நீதி கொடுக்கும் சாட்டையடி.. கொஞ்சம் கஷ்டம்!
Chanakya Niti: இளமைக்காலத்தில் நாம் செய்யக்கூடிய தவறுகள் நமது எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என சாணக்கிய நீதி நூலில் சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
Chanakya Niti: சாணக்கியர் வாழ்க்கை தொடர்பான பல விஷயங்களை நமக்கு எடுத்துரைத்துள்ளார். அனைத்து விதமான காரியங்களுக்கும் சாணக்கியரின் நீதி சாஸ்திரத்தில் விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. நமது வாழ்க்கையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்கள், இன்பத் துன்பங்கள் என அனைத்தும் குறித்தும் சாணக்கிய நீதியில் சாணக்கியர் கூறியுள்ளார்.
நமது வாழ்க்கையில் அவசர அவசரமாக எடுக்கப்படும் முடிவுகள் பிற்காலத்தில் பல விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். அது குறித்து சாணக்கியர் விவரமாக தனது நீதி நூலில் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மற்றும் வெற்றியை ருசித்துப் பார்க்க விரும்புபவர்களுக்கு எத்தனையோ நீதிகளை சாணக்கியர் கூறியுள்ளார். அந்த வகையில் இளமைக்காலத்தில் நாம் செய்யக்கூடிய தவறுகள் நமது எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என சாணக்கிய நீதி நூலில் சாணக்கியர் குறிப்பிட்டுள்ளார். அது என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
எங்கள் 2025 ஜோதிட பக்கத்திற்கு வரவேற்கிறோம்! கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் இயக்கத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்று பாருங்கள்.
அவசியமற்ற செயல்கள்
நமது இளமை காலத்தில் தேவையில்லாமல் ஈடுபடும் அனைத்து காரியங்களும் எதிர்காலத்தை வீணாக்கும். அனாவசிய செயல்பாடுகளின் ஈடுபடுவது எதிர்காலத்தில் வருத்தத்தை ஏற்படுத்தும். தங்களது நேரத்தை சரியாக பயன்படுத்தாமல் இளமை காலத்தில் வீணடித்து செயல்படுபவர்களுக்கு எதிர்காலம் மிகவும் கடுமையாக இருக்கும். பல நெருக்கடிகளை எதிர்காலம் உங்களுக்கு கொடுக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.
எதிர்கால சிந்தனை இல்லாமை
இளமை காலத்தில் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் மிகவும் மகிழ்ச்சியோடு சுற்றித் திருபர்களுக்கு முதுமை மிகவும் வருத்தமாக இருக்கும் என கூறுகிறார் சாணக்கியர். பெரும்பாலும் அனைவரது வாழ்க்கையும் முதுமை காலத்தில் மிகவும் சவாலாக இருக்கக்கூடும். வாழ்க்கையில் வரக்கூடிய வெற்றிகளின் திறவுகோலாக இளமை காலம் விளங்கி வருகிறது. அதனை சரியாக சிந்தித்து செயல்படாவிட்டால் எதிர்காலம் மிகவும் கொடுமையாக இருக்கும் என சாணக்கியர் கூறுகிறார்.
பணத்தின் அவசியம்
பணத்தின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள் இளமை காலத்தில் வேடிக்கையாக வாழ்ந்து விடுகிறார்கள். அது எதிர்காலத்தை மிகவும் பாதிக்கக்கூடும். வயது முதிர்ந்த பிறகு பணம் இல்லாமல் போனால் நிதி ரீதியாக மிகப்பெரிய கஷ்டங்கள் ஏற்படக்கூடும். அதன் காரணமாக இளமைக்காலத்தில் பணத்தை செலவு செய்யும்போது மிகவும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். இல்லை என்றால் வயதான காலத்தில் உங்களுக்கு பல நிதி நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என சாணக்கியர் கூறுகிறார்.
கெட்ட நண்பர்கள்
இளமை காலத்தில் நாம் பயணம் செய்யும் நட்பு வட்டாரம்தான் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கின்றது. கெட்ட சகவாசத்தில் ஈடுபடுபவர்கள் அதிலிருந்து விலகாமல் இருந்தால் பிற்காலத்தில் மிகவும் துன்பத்திற்கு உள்ளாவார்கள். கெட்டவர்களின் நட்பு நமது வாழ்நாள் முழுக்க தொடர்ந்து வரும். இளமை காலத்தை வீணடித்து விட்டு முதுமை காலத்தில் இயங்கி நின்றால் அதனால் எந்த பயனும் கிடையாது என சாணக்கியர் கூறுகிறார்.
நேர பயன்பாடு
ஒருவருடைய வாழ்க்கையில் நேரம் மிகவும் இன்றியமையாத விஷயமாக திகழ்ந்து வருகிறது. நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு வாழ்க்கை எப்போதும் சிவப்பு கம்பளம் விரித்து காத்திருக்கும். இளமைப் பருவத்தில் நேரத்தை மதிக்காமல் செயல்படுபவர்கள் முதுமை காலத்தில் மிகப்பெரிய துன்பத்தை சந்திக்கின்றார். சரியான நேரத்தில் சரியான முயற்சிகளை இளமைக்காலத்தில் செய்தால்தான் முதுமை காலம் மகிழ்ச்சியாக இருக்கும் இல்லையென்றால் தோல்வியை தழுவும். எனவே நேரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கண்க்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்