தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs Whose Lord Mercury Gets Money Yoga

Money Luck: புதன் தரும் ராஜயோக வாழ்க்கை இந்த ராசிக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 13, 2024 02:45 PM IST

புதன் பகவான் பண யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

அந்த வகையில் புதன் பகவான் நவகிரகங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். ஒருவருடைய ராசிகள் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு கல்வி மற்றும் அறிவு உள்ளிட்ட விஷயங்களில் மிகுந்த பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

புதன் பகவான் தற்போது நிவர்த்தி அடைந்த நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ஜனவரி 2ஆம் தேதி அன்று நேரான பயணத்தை தொடங்கிய புதன் பகவானால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். கூட்டுத் தொழில் வெற்றி அடையும் தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் விலகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். குழந்தைகளால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.

துலாம் ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் நேரான பயணத்தை தொடங்கி பயணித்து வருகிறார். உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

சிம்ம ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் நேரான பயணத்தில் செய்து வருகிறார். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சேர்க்கக் கூடிய சூழ்நிலை அதிகம் உண்டாகும். பணவருவாய்க்கு எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகி முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெற்றோருடன் உறவு வலுவாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.