தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs Which Are Going To Enjoy Luxurious Life By Lord Venus

Sukra Luck: சுக்கிரனின் ராஜயோக ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 12, 2024 11:51 AM IST

சுக்கிர பகவானால் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கப் போகும் ராசிகளை காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். சுக்கிர பகவான் வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார்.

விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிரன் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி 

 

சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். வருமானம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உருவாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு குறையும்.

துலாம் ராசி 

 

சுக்கிரன் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானம் அதிகரிக்கும் பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். காரியத்தில் இருந்த தடைகள் விலகும். நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். சுப காரியங்கள் நடக்கும்.

தனுசு ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு நல்ல வாழ்க்கையை தரப்போகின்றார். தினசரி வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பண பரிவர்த்தனைகளில் முன்னேற்றம் இருக்கும். பெற்றோர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் விலகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்