தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: சூரியனும் சனியும் அதிர்ஷ்டத்தை கொடுக்கின்ற ராசிகள்

Money Luck: சூரியனும் சனியும் அதிர்ஷ்டத்தை கொடுக்கின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 20, 2024 05:26 PM IST

சூரியனும் சனியும் சேர்ந்து யோகத்தை கொடுக்க போகும் ராசிக்காரர்களை காண்போம்.

சூரியன் சனி
சூரியன் சனி

அந்த வகையில் சூரிய பகவான் தை ஒன்றாம் தேதி பொங்கல் தினத்தன்று தனது இடத்தை மாற்றினார். மகர ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அன்றைய தினம் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது.

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவானின் சொந்த ராசி இந்த மகர ராசி மகர ராசியில் சூரிய பகவான் நுழைந்துள்ள காரணத்தினால் சனி பகவானும் சூரியனும் சேர்ந்துள்ளனர். சூரியன் சனி சேர்க்கையால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால் உங்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும் மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டில் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். சூரிய பகவானின் சேர்க்கை உங்களுக்கு அதீத பலன்களை கொடுக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். திடீரென எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு கிடைக்கும். சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்கும். பண வரவில் எந்த குறைவும் இருக்காது.

துலாம் ராசி

 

உங்கள் ராசியின் ஐந்து மற்றும் நான்காம் வீட்டின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சுபிட்சத்தை கொடுக்கப் போகின்றது. உங்களுக்கு சுப பலன்கள் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel