தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sani: சூரியனும் சனியும் சம்பவம் செய்ய தயார்..சிக்கிக்கொண்ட ராசிகள்

Sani: சூரியனும் சனியும் சம்பவம் செய்ய தயார்..சிக்கிக்கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 13, 2024 06:00 PM IST

சூரியனும் சனியும் சேர்ந்து சங்கடங்களை கொடுக்க போகும் ராசிகளை காண்போம்.

சனி மற்றும் சூரியன்
சனி மற்றும் சூரியன்

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒவ்வொரு முறையும் சூரிய பகவான் இடமாற்றம் செய்யும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரிய பகவான் ஜனவரி 15ஆம் தேதி அன்று சனிபகவான் ராசியான மகர ராசியில் நுழைந்தார். இன்று சூரிய பகவான் சனி பகவானின் மற்றொரு ராசியான கும்ப ராசியில் நுழைந்தார்.

சனி பகவானும் சூரிய பகவானும் தந்தை மகன் கிரகமாக கூறப்பட்டாலும் இருவரும் எதிர்கிரகங்களாகவே கருதப்படுகின்றனர். சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது கும்ப ராசியில் சனிபகவானும் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சனியும் சூரியனும் சேர்ந்து சில ராசிகளுக்கு சங்கடத்தில் ஏற்படுத்த உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சூரியன் செல்கின்றார். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. இல்லையென்றால் பல்வேறு விதமான சிக்கல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சூரிய பகவான் செல்கின்றார். உங்களுடைய அதிபதியாக அவர் இருந்தாலும் பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல முன்னேற்றம் உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். வியாபாரத்தில் பெரிய அளவுக்கு வருமானம் இருக்காது. புதிய திட்டங்களை தவிர்ப்பது நல்லது. தன்னம்பிக்கை குறைய கூடிய சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

விருச்சிக ராசி

 

உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சூரியன் செல்கின்றார். அதனால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் ஏற்படும். கவனம் செலுத்தி வேலையை செய்ய வேண்டும். இல்லை என்றால் சிக்கல்கள் ஏற்படும் பயணங்கள் நல்ல பலன்களை தராது. பணம் சம்பாதிப்பதில் கவனமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சேமிப்பும் செய்ய வேண்டும். சில விஷயங்களில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9