Tamil News  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Get Yogic Benefits Due To The Combination Of Rahu And Mercury

Rahu and Mercury: ராகுவோடு சேர்ந்து புதன் கொட்டும் பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 04, 2024 02:57 PM IST

Rahu and Mercury: ராகு மற்றும் புதன் சேர்க்கையால் யோக பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

 ராகு, புதன்
ராகு, புதன்

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்த அக்டோபர் மாத இறுதியில் ராக பகவான் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக் கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, புத்திசாலித்தனம், அறிவு, நரம்பு, உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். இவருடைய இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதன் பகவான் மார்ச் மாதத்தில் ராகு பகவான் பயணம் செய்து வரும் மீன ராசியில் நுழைகின்றார்.

இதன் காரணமாக ராகு மற்றும் புதன் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மிதுன ராசி

 

உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் ராகு புதன் சேர்க்கை நடைபெற உள்ளது. அதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. பெற்றோருடன் உறவு வலுவடையும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் மற்றும் ராகு சேர்க்கை நிகழ உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் முடிவாகும். எதிர்காலத்தில் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும். பேச்சு திறமையால் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். எதிர்பாராத நேரத்தில் கடன் தொகை உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடக ராசி

 

ராகு மற்றும் புதன் சேர்க்கை உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நிகழ உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நினைவில் இருந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். எதிர்பாராத நேரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் நிறைவடையும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உங்களுக்கு சாதகமாக அனைத்தும் நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.