தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Get Good Results From The Direct Transit Of Lord Mercury

Money Luck: பணமழை தரும் புதன்.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 04, 2024 01:58 PM IST

Transit of Mercury: புதன் பகவானின் நேரான பயணத்தால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

புதன் பகவான்
புதன் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவானின் அருளைப் பெற்றவர்கள் தனது இனிமையான பேச்சாளர் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் பகுத்தறிவும், புத்திசாலித்தனமும் புதன் பகவானின் ஆதிக்கத்தால் கிடைக்கும் என கூறப்படுகிறது.

நவகிரகங்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி இரண்டாம் தேதி அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைந்தார். இவருடைய நேரான பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

புதன் பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்க உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுன ராசி

 

புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பணவரவில் எந்த குறையும் இருக்காது.

கன்னி ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்களை விளக்கி கொடுப்பார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர வாழ்க்கை உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் விலகும் பண பரிவர்த்தனைகளில் இருந்த பிரச்சனைகள் முடியும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

தனுசு ராசி

 

புதன் பகவான் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கூட்டுத் தொழில் நல்ல முன்னேற்றத்தை தரும். இந்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.