Pongal Luck: சுக்கிரன் யோகம் தர போகிறார்.. ராஜராசிகள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Pongal Luck: சுக்கிரன் யோகம் தர போகிறார்.. ராஜராசிகள் இவர்கள்தான்

Pongal Luck: சுக்கிரன் யோகம் தர போகிறார்.. ராஜராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Published Jan 11, 2024 11:00 AM IST

சுக்கிர பகவானால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சுக்கிரன்
சுக்கிரன்

இது போன்ற போட்டோக்கள்

சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றும் சுக்கிர பகவான் வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார்.

விருச்சிக ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சுக்கிர பகவானால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு தேவையான அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுப்பார். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானம் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். சுப காரியங்கள் வீட்டில் நடக்கும்.

தனுசு ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை தருகின்றது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பண பரிவர்த்தனைகளில் நல்ல லாபம் கிடைக்கும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். பழைய சிக்கல்கள் முடிவுக்கு வரும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.

மீன ராசி

 

சுக்கிரனின் புதிய பயணம் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையோடு இருந்த மன வருத்தங்கள் குறையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்