தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Get A Happy Life Due To Rahu Ketu Nakshatra Change

Rahu Ketu: ராகு கேது அருளைப் பெற்ற ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 28, 2024 02:46 PM IST

Rahu Ketu: ராகு கேது நட்சத்திரம் மாற்றத்தால் சுக வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.

ராகு கேது
ராகு கேது

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ராகு பகவான் சேது பகவான் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளனர். நவகிரகங்களின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும் கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் நுழைந்தனர். இதனால் சில ராசிகள் மாற்றத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசி

ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். தாம்பத்திய வாழ்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண மாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமணத்தில் ஏற்பட்டு இருந்த தடைகள் விலகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் சிறப்பாக அமையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

ராகு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையும். பொருளாதாரத்தில் நல்ல முயற்சிகள் இருக்கும். உங்களுடைய வாழ்க்கையை செழிப்பாக மாறும் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வணிகத் துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

துலாம் ராசி

 

ராசி ராகு கேது சேர்க்கை உங்களுக்கு சிறப்பான பலன்களை இந்த ஆண்டு கொடுக்கப் போகின்றனர். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல நிலை உருவாகும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். மங்களகரமான காரியங்கள் வீட்டில் நடக்கும். ராகு நட்சத்திரம் மாற்றம் தான் உங்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.