தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Experience Yoga From March Due To Lord Mercury

Money Luck: உதயமாகின்றார் புதன்.. மார்ச் மாதத்தில் குபேரன்.. கொட்டிக் கொடுக்கப் போகின்றார்.. பண மழையில் நனையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 14, 2024 11:29 AM IST

Lord Mercury: நவகிரகங்களின் ஒவ்வொரு செயலும் அனைத்து ராசிகளுக்கும் மாற்றத்தை கொடுக்கும். அந்த வகையில் புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி என்று மீன ராசியில் உதயமாகின்றார்.

புதன் பகவான்
புதன் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

கிரகங்களின் மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் ஒவ்வொரு செயலும் அனைத்து ராசிகளுக்கும் மாற்றத்தை கொடுக்கும். அந்த வகையில் புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி என்று மீன ராசியில் உதயமாகின்றார். நவகிரகங்களில் இது முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பொதுவாக அஸ்தமன நிலையில் இருந்து ஒரு கிரகம் உதயமாகும் பொழுது அதனுடைய ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். தற்போது புதன் மீன ராசியில் உதயமாகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

 

புதன் பகவானின் உதவித்தல் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய வேலைகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பது உறுதி. மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கக்கூடும்.

ரிஷப ராசி

 

புதன் பகவான் உதயம் உங்களுக்கு பண வரவு அதிகப்படுத்தி கொடுக்கப்படுகிறது. நல்ல முன்னேற்றம் அடையும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். உறவினர்களால் உங்களுக்கு அனுகூலமான நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நோய் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

கன்னி ராசி

 

புதனின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய உயர்வை கொடுக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேல் படிப்பிற்காக மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்வார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் அமைதி நிலவும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

சனி பகவானின் உதய காலம் உங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல லாபத்தை பெற்று தரும். மொத்தமாக உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel