தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Luck: ரகசியமாக வரும் ராகு.. பணத்தோடு விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஆன் தி வே.. நீங்க என்ன ராசி?

Rahu Luck: ரகசியமாக வரும் ராகு.. பணத்தோடு விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஆன் தி வே.. நீங்க என்ன ராசி?

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 28, 2024 04:54 PM IST

Rahu Luck:

ரகசியமாக வரும் ராகு.. பணத்தோடு விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஆன் தி வே.. நீங்க என்ன ராசி?
ரகசியமாக வரும் ராகு.. பணத்தோடு விளையாடும் ராசிகள்.. அதிர்ஷ்டம் ஆன் தி வே.. நீங்க என்ன ராசி?

Rahu Luck: நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனி பகவானுக்கு பிறகு அனைவரும் அச்சப்படக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ராகு கேது இவர்கள் இருவரும் எப்போதும் இணை பிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும்.

அந்த வகையில் ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவான் எப்பொழுதும் கெடு பலன்களை கொடுப்பது கிடையாது. இருக்கும் இடத்தை பொறுத்து தனது பலனை அள்ளிக் கொடுப்பார்.

ராகு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ஜூலை மாதத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதனால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ரிஷப ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கவலைகளை ஏற்படுத்திய சம்பவங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்ற தரும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும்.

துலாம் ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.

விருச்சிக ராசி

ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அனைத்து காரியங்களும் வெகுவிரைவாக முடிவடையும் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றங்கள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக உங்களுக்கு எந்த சிக்கல்களும் இருக்காது பணவரவில் எந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9