தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Be Troubled By Lord Mercury

Budhan: புதனால் கஷ்டப் போகும் ராசிகள் இவர்கள் தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 07, 2024 01:40 PM IST

புதன் பகவானால் சிக்கலை சந்திக்கப் போகும் ராசிகளை காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, ஞானம், பேச்சு, திறமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார்.

புதன் பகவானின் இந்த வக்ரப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கடக ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்க சற்று தாமதமாகும். வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறைய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

புதன் பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. வீண் விரயங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதமாகும் கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செலவுகளை குறைத்துக் கொண்டால் லாபம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் வக்கிர பயணத்தில் இருந்து வருகிறார். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொறுமையாக இருப்பது நல்லது பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையில்லாமல் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.