தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Be Troubled By Lord Mars

Bad Luck: செவ்வாயால் சிரமம் உண்டாகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 12, 2024 01:37 PM IST

செவ்வாய் பகவானால் சிரமத்தை சந்திக்க போகும் ராசிகளை காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அப்போது 12 ராசிகளும் பலன்களை பெறுவார்கள். செவ்வாய் பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கே காணலாம்.

மேஷ ராசி

 

செவ்வாய் பகவானால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க போகின்றது. சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்கின்ற வாய்ப்புகள் உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தம் ஏற்படும். குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருங்கள்.

மிதுன ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கை துணையோடு பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில். மோசமான சூழ்நிலை உண்டாகும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனம் தேவை.

மகர ராசி

 

செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளை உருவாக்க போகின்றார். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். செலவு அதிகமாக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சில புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்காமல் தள்ளி போக வாய்ப்பு உள்ளது. வீண் செலவுகள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.