தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Be Lucky Due To Sun Transit

சூரியன் வேலையை தொடங்கி விட்டார்.. 3 ராசிகளுக்கு பணமழை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 06, 2024 05:28 PM IST

சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகளை காண்போம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சூரிய பகவான் எப்போதும் அனைத்து விதமான முன்னேற்றத்தையும் கொடுக்கக் கூடியவர். தற்போது சனி பகவானின் ராசி கும்ப ராசியில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். வரும் மார்ச் 14ஆம் தேதியன்று குரு பகவான் ராசியான மீன ராசியில் நுழைகின்றார்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி குரு மற்றும் சூரியன் இருவரும் நண்பர்கள் கிரகம் இதனால் அவர்களுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். சூரிய பகவானின் இடமாற்றத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மீன ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கூட்டுத்தொழில் முயற்சிகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதிய உறவுகள் உங்களைத் தேடி வரும். உறவினர்களால் நன்மைகள் உண்டாகும்.

தனுசு ராசி

 

உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சூரியன் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் அதிகமாக கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். சூரியனின் அருளால் உங்களுக்கு மன அமைதி மற்றும் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

கடக ராசி

 

சூரியன் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாக கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலை தொடர்பான பயணத்தில் உங்களுக்கு முன்னேற்றம் இருக்கும். நல்ல பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel