தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Be Blessed By Lord Venus

Venus Luck: சுக்கிர இடமாற்றம்.. ராஜயோக ராசி காரர்கள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 10, 2024 05:34 PM IST

சுக்கிர பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சுக்கிர பெயர்ச்சி
சுக்கிர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சுக்கிர பகவான் வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இவருடைய இடமாற்றம் சுகமாக கருதப்படுவதால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.

சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில நான்கு ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. வரும் பொங்கலிலிருந்து அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

ரிஷப ராசி

 

சுக்கிர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்க போகின்றார். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

துலாம் ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு பல்வேறு விதமான சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் விலகும் கனிவான பேச்சால் காரியத்தை சாதிப்பீர்கள். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு ஜாதகமாக முடிவடையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும்.

தனுசு ராசி

 

சுக்கிரன் உங்களுக்கு செல்வத்தை கொடுக்கப் போகின்றார். இதுவரை நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இதுவரை தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும்.

மீன ராசி

 

சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு வரப் பிரசாதமாக அமையப்போகின்றது. வருமானத்தில் பெரிய லாபம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏதுவாக நடக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும் காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.