தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Be Blessed By Lord Surya

Lord Surya: பிரகாச வாழ்க்கை பெறும் ராசிகள்.. சூரிய ராசிகள் யார்?

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 07, 2024 10:32 AM IST

சூரிய பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சூரிய பகவான் ஜனவரி மாதம் 15 ஆம் தேதியன்று இடம் மாற்றம் செய்கிறார். தைப்பொங்கல் தினத்தன்று இடமாறுகின்ற காரணத்தினால் சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருப்பினும் சில ராசிகள் சுப பலன்களை பெற போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மீன ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். தொழில் துறையில் நல்ல வெற்றிகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் அமர போகின்றார். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு பலனும் கிடைக்கப் போகின்றது. பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும்.

விருச்சிக ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் அமர போகின்றார். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.