தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Be Afflicted By The Declination Of Lord Mercury

Budhan Bad Luck: மகரத்தில் அஸ்தமிக்கும் புதன்.. சிக்கிக்கொண்ட ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 23, 2024 01:44 PM IST

புதன் பகவான் அஸ்தமனத்தால் கஷ்டப்பட போகும் ராசிகளை காண்போம்.

புதன் பெயர்ச்சி
புதன் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் சனி பகவானின் ராசியான மகர ராசியில் பயணம் செய்தவர். கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி அன்று மகர ராசியில் அஸ்தமனமானார்.

புதன் பகவானின் அஸ்தமனத்தால் ஒரு மாத காலம் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

புதன் பகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் அஸ்தமனம் ஆகியுள்ளார். இதனால் உங்களுக்கு பல வேலைகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகள் உள்ளிட்ட விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழிலில் மிகவும் கவனம் தேவை.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூட்டு வணிக முறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மன அழுத்தம் ஏற்படக்கூடும். உடன் வேலை செய்பவர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வார்த்தைகளில் மிகவும் கவனம் தேவை. நிதி இழப்புகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் புதன் அஸ்தமனம் ஆகின்றார். பண இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பண பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel