தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Will Be Affected By Rising Lord Mars

Mars Bad Luck: செவ்வாய் உதயமானார்..3 ராசிகளுக்கு கஷ்டம்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 18, 2024 02:49 PM IST

செவ்வாய் பகவான் உதயத்தால் கஷ்டப்படப் போகும் ராசிகளை காண்போம்.

செவ்வாய் பெயர்ச்சி
செவ்வாய் பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் நேற்று அதாவது ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார்.

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். செவ்வாய் பகவான் தனுசு ராசியில் உதயமாகின்ற காரணத்தினால் சில ராசிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெற்றோரின் உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் செலவாக அதிக வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களோடு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கடின உழைப்பு மட்டுமே பலன்கள் பெற்று தரும்.

கன்னி ராசி

 

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் உதயமாகின்றார். வளர்ச்சி பாதையில் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து தடைகளையும் தைரியமாக கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் இந்த சிக்கல்களும் ஏற்படாது. மற்றவர்களிடத்தில் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி

 

சுவை பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் உதயமாகின்றார். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பண நிர்வாகம் மிகவும் அவசியமாகும். குடும்ப தேவைகளை கவனிப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை தேடுபவர்கள் இருக்கும் வேலையை வைத்துக் கொண்டு தேட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையையும் கவனமாக கையாள வேண்டும். திட்டம் தீட்டி செயல்படுவது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்