Sani Suriyan: சனி பின்னால் செல்லும் சூரியன்.. அரியணையில் அமர போகும் ராசிகள்
சூரியனும் சனியும் சேர்ந்து ராஜயோகத்தை கொடுக்கின்ற ராசிக்காரர்களை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சூரிய பகவான்.
இது போன்ற போட்டோக்கள்
May 13, 2025 06:29 AM'வெற்றியில் மிதக்கும் யோகம் உங்களுக்கா.. கவனமாக இருக்க வேண்டியது யார்' மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே இன்று சாதகமா!
May 12, 2025 12:18 PMபுத்த பூர்ணிமா நாளான இன்று உருவாகும் யோகம்.. எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும்?
May 12, 2025 05:00 AM"லாபத்தில் மிதக்கும் யோகம் யாருக்கு.. மகிழ்ச்சியில் சாத்தியமா" இன்று மே 12 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க
May 11, 2025 02:57 PMநவ பஞ்சம ராஜ யோகம்.. இந்த 3 ராசிகளும் அதிர்ஷ்டத்தின் முகவரி.. பண ஆதாயம், வாழ்க்கையில் வெற்றி
May 11, 2025 07:00 AMகுரு சுக்கிரன் பலன்கள்: பணமழை கஜலட்சுமி யோகம்.. குரு சுக்கிரன் கொட்டி தீர்க்கும் ராசிகள்..!
May 11, 2025 04:45 AM'மேஷம் முதல் மீனம் வரை.. மே 11ஆம் தேதி எப்படி இருக்கப்போகிறது..’: 12 ராசிகளுக்கான பலன்கள்!
சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. கடந்த ஜனவரி மாதம் 15 ஆம் தேதி அன்று மகர ராசிக்குள் சூரிய பகவான் நுழைந்தார். இதுவே பொங்கல் தினமாகவும் மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி திருநாளாகவும் கொண்டாடப்பட்டது.
நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பதை இவருடைய வேலை. 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது இவர் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார்.
சூரிய பகவான் இந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் சனிபகவான் பயணம் செய்து வரும் அவருடைய சொந்த ராசியான கும்ப ராசியில் நுழையப் போகின்றார். இந்நிலையில் சனி மற்றும் சூரிய பகவான் இருவரும் இணைகின்றனர். இவர்களுடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சிம்ம ராசி
சனி மற்றும் சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. சூரிய பகவானின் சொந்த ராசியாக திகழ்த்து வருகின்றீர்கள். உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சூரிய பகவான் நுழைகின்றார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கைத் துணையால் முன்னேற்றம் கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கூட்டு முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சாதனை படைப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.
தனுசு ராசி
சூரிய பகவான் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் சூரிய பகவான் பார்க்கின்றார். மன தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும்.
கும்ப ராசி
சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. உங்கள் ஜாதகத்தின் அதிபதியாக சூரியன் திகழ்ந்து வருகின்றார். ஆளுமை திறன் அதிகரித்து தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மிக பயணம் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு அன்பு உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
