தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Have Gained Yoga Due To The Transit Of Venus In Aquarius

சனியோடு சேர்ந்தார் சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 08, 2024 11:45 AM IST

Transit of Venus: கும்ப ராசியில் சுக்கிரன் நுழைந்ததால் யோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.

சுக்கிரன்
சுக்கிரன்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் தற்போது சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் மார்ச் 7ஆம் தேதி அன்று இடம் மாறியுள்ளார்.

கும்ப ராசியில் ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிரன் இணைகின்றார். இவர்களின் சேர்க்கை மற்றும் சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் சுக்கிரனால் லட்சுமி யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

 

சுக்கிரன் உங்கள் ராசியில் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பற்றி தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். திரைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் வரும் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் நடக்கும்.

துலாம் ராசி

 

உங்களுக்கு சுக்கிரனால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. உங்களுடைய ராசிகள் நான்காம் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து ஆதாயம் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும்.

கும்ப ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிரன் புகுந்துள்ளார் .ஏற்கனவே சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் உங்களுக்கு நல்ல வாழ்க்கையைப் பெற்றுத் தருவார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு எந்த சிக்கல்களும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் மேம்பாடு உண்டாகும். சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel