தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Get Yogic Life From Guru Bhagavan

Guru Peyarchi Luck: குரு கொட்டுவார்.. பணமழை உறுதியான 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 07, 2024 09:43 AM IST

குருபகவானால் யோக வாழ்க்கையை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் மே ஒன்றாம் தேதி அன்று தனது இடத்தை மாற்றுகிறார்.

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குருபகவான் இடம் மாறுகின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தில் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

 

சுக்கிர பகவானின் ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு குரு பகவான் அள்ளிக் கொடுக்கப் போகின்றார். எடுத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். சுப செலவுகளாக உண்டாகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்ம ராசி

 

சூரிய பகவானின் ராசியாக விளங்கக்கூடிய உங்களுக்கு குருபகவான் அள்ளிக் கொடுப்பார். குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழில் விரிவாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

கன்னி ராசி

 

புதன் பகவானின் அதிபதியாகக் கொண்ட உங்களுக்கு குரு பகவான் திருப்தியான வாழ்க்கையை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel