Tamil News  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Get Yogic Benefits From Lord Shani

Shani 2024: சனியோடு சேர்ந்து பறக்க போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 19, 2024 04:12 PM IST

Saturn Transit: சனி பகவானால் யோக பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவான் வரும் 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இது பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். புதிதாக பிறந்துள்ள 2024 ஆம் ஆண்டில் பல ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

இந்த புத்தாண்டில் உங்களுக்கு சனி பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

ரிஷப ராசி

 

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை சனி பகவான் உங்களுக்கு முடித்துக் கொடுப்பார். அசைக்க முடியாத சொத்துக்கள் உங்களை வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடக ராசி

 

சனிபகவான் சிறப்பான புத்தாண்டை உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். இதுவரை வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் நிறைவடையும். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வாழ்க்கை துணையோடு மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

சனிபகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க போகின்றார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மிகப்பெரிய யோகம் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கின்ற வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு மிகப்பெரிய மாற்றம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.