Tamil News  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Get Yoga From Lord Venus

Sukra Zodiac: சுக்கிரனின் யோக அரியாசனம் இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 24, 2024 05:45 PM IST

சுக்கிர பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிக்காரர்களை காண்போம்.

சுக்ர பெயர்ச்சி
சுக்ர பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சுக்கிர பகவானிடம் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

சுக்கிர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியை ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் கொடுக்கும். அந்த வகையில் சுக்கிர பகவான் மகர ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சுக்கிரன் உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு நட்பு உண்டாகும். மற்றவர்களின் உதவி உங்களை தேடி வரும். வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தங்கள் முடிவடையும். தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நிதி ஆதாயமும் முழுமையாக கிடைக்கும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் விலகும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிரன் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளார். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மகர ராசி

 

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பல்வேறு பணிகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும் இருப்பினும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.