தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Get The Yoga From March Due To Saturn Rising

Sani Rising: சனி உதயத்தில் ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 01, 2024 09:59 AM IST

சனி உதயத்தால் மார்ச் முதல் யோகத்தை பெறும் ராசிகளை காண்போம்.

சனி
சனி

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு இடம் மாறுகிறார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் மார்ச் மாதத்தில் உதயமாகின்றார். இவருடைய உதயத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனிபகவான் உங்கள் ராசிகள் 11வது வீட்டில் உதயமாகின்றார். இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். நிலத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் இந்த குறையும் இருக்காது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் சனிபகவான் ஒன்பதாவது வீட்டில் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். அனைத்து சிக்கல்களும் நீங்க மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் விரும்பிய இடம் உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

சிம்ம ராசி

 

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனி பகவான் உதயம் ஆகின்றார். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரம் விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நல்ல முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் மார்ச் மாதத்தில் இருந்து உங்களுக்கு உண்டாகும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். நல்ல லாபத்தை தரக்கூடிய முன்னேற்றங்கள் வியாபாரத்தில் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel