தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Get Good Yoga By The Grace Of Lord Surya

Lord Surya: சூரியனின் ஆசி பெற்ற ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 10, 2024 02:23 PM IST

சூரிய பகவானின் அருளால் நல்ல யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

சூரிய பெயர்ச்சி
சூரிய பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சூரிய பகவான் ஒரு மாதம் கழித்து தனது இடத்தை மாற்றுகிறார்.

இதுவரை தனுசு ராசியில் பயணம் செய்து வந்த சூரிய பகவான் மகர ராசிக்கு இடமாற்றம் செய்ய உள்ளார். சூரிய பகவானின் இடமாற்றத்தால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

மகர ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பணவரவில் எந்த குறையும். இருக்காது அதிகப்படியான நல்ல பலன்களை பெற போகின்றீர்கள். சூரிய பகவானின் தாக்கம் உங்களுக்கு அதிர்ஷ்ட யோகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மேஷ ராசி

 

சூரிய பகவானால் நல்ல பலன்களை நீங்கள் பெறப்போகின்றீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் விரிவடையும். எதிர்பாராத நேரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

சூரிய பகவான் உங்களுக்கு சிறப்பான மாற்றங்களை கொடுக்கப் போகின்றார். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல ஏற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். இக்கட்டான சூழ்நிலையில் அதிர்ஷ்டம் உங்களை காப்பாற்றும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வாழ்க்கைத் துணியுடன் உறவு சுமூகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

சூரியன் உங்களுக்கு தொழில் ரீதியான நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. இக்கட்டான சூழ்நிலைகள் நிவர்த்தி அடையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.