தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Are Ruled By Saturn

Shani Palan: சனி யோக பலன்கள் இந்த ராசிகளுக்கு தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 18, 2024 09:50 AM IST

சனிபகவானால் யோகத்தை அள்ளப் போகும் ராசிகளை காண்போம்.

சனி பெயர்ச்சி
சனி பெயர்ச்சி

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அந்த வகையில் சனிபகவானும் தனது இடத்தை மாற்றி உள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்கிறார்.

இந்த ஆண்டு முழுவதும் கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

 

சனிபகவான் உங்களுக்கு இரட்டிப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். பல்வேறு வழிகளில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். புதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக அமையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அலட்சியம் காட்டாமல் கடின உழைப்பை கொடுக்க வேண்டும்.

ரிஷப ராசி

 

சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்க போகின்றார். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்த்ததை விட நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். புதிதாக தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது.

மகர ராசி

 

சனிபகவான் உங்களுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். திடீரென்று பண வரவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் உண்டாகும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.