Tamil News  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Are Going To Get Rajayoga Life Due To Lord Saturn

Sani: சனிபகவானால் உச்சம் செல்ல போகும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 02, 2024 03:15 PM IST

Lord Saturn: சனி பகவானால் ராஜயோக வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.

சனிபகவான்
சனிபகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

சனிபகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு தான் தன்னுடைய மாற்றத்தை செய்யப் போகிறார்.

நவகிரகங்களில் சனி பகவானின் இடப்பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது இதனால் அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும். கும்ப ராசி தற்போது பயணம் செய்து வரும் சனி பகவான் சில ராசிகளுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.

ரிஷப ராசி

 

பல்வேறு விதமான வாய்ப்புகளை சனி பகவான் உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. சேமிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுன ராசி

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்க போகின்றார் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் செலவுகள் அதிகரித்தாலும் சுப செலவுகளாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உண்டாக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் இந்த காலம் உங்களுக்கு சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேஷ ராசி

 

சனிபகவான் உங்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்க போகின்றார். இவருடைய சம்சாரம் உங்களுக்கு லாபகரமாக அமைய உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். ஏனென்றால் குரு பகவானும் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மற்றபடி எந்த சிக்கலும் கிடையாது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.