Money Luck: புதன் அதிர்ஷ்ட யோகத்தை கொட்டப் போகின்றார்
புதன் பகவானால் புத்தாண்டில் நல்ல யோகத்தை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.
நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கல்வி, அழகு, அறிவு, சிந்தனை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக புதன் பகவான் விளங்கி வருகிறார்.
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதன் பகவான் இடமாற்றம் அடைகிறார்.
வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று புதன் பகவான் ராசி மற்றும் செய்கிறார். ஜனவரி 2ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷ ராசி
புதன் பெயர்ச்சியால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
மிதுன ராசி
புதன் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. கூட்டம் முயற்சிகள் நல்ல பலனை பெற்றுத் தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை நிலைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புதன் பகவான் உங்களுக்கு திருமண பாக்கியத்தை கொடுக்கப் போகின்றார்.
கன்னி ராசி
புதன் பகவான் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கொடுக்கப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனமாக அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர பொருட்கள் உங்களை வந்து சேர வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். சிறப்பான பலன்கள் உங்களை தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது.
தனுசு ராசி
புதன் பகவான் உங்களுக்கு அபூர்விதமான பலன்களை கொடுக்கப் போகின்றார். முன்னோர்களால் இருந்த சொத்துக்கள் அனைத்தும் உங்களுக்கு ஆதாயத்தை பெற்று தரும். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும். கூட்டுத் தொழில் முயற்சிகள் முன்னேற்றத்தை பெறும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9