தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Are Going To Get Good Results From Lord Surya

Sani Suriya Luck: குபேரனாக மாற்ற போகும் சூரியன்.. ராஜ ராசிகள் இவர்கள்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 18, 2024 06:01 PM IST

சூரிய பகவானால் நல்ல பலன்களை பெற போகின்ற ராசிகளை காண்போம்.

சூரிய பகவான்
சூரிய பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

மகர ராசி சனி பகவானின் சொந்த ராசியாகும். புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து சூரிய பகவான் சனிபகவானின் சொந்த ராசியில் புகுந்துள்ளார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் கைகோர்த்துள்ளனர்.

சூரியனும் சனியும் கைகோர்த்த காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற குறிப்பிட்டு சில ராசிகள் குறித்து இங்கு காணப் போகின்றோம்.

மேஷ ராசி

 

சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் இடமாற்றம் செய்துள்ளார். அதனால் உங்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். மிகப்பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

ரிஷப ராசி

 

சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் இடம் மாற்றம் செய்துள்ளார். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீரென பண வரவு இருக்கும். சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக பல்வேறு விதமான நன்மைகளை பெற்று தரும்.

துலாம் ராசி

 

சூரிய பகவான் உங்கள் ராசியில் நான்கு மற்றும் ஐந்தாம் வீட்டில் இடப்பெயர்ச்சி செய்துள்ளார். இது உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும்.

மகர ராசி

 

புதன் மற்றும் சூரியன் இணைவு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். அனைத்து விதமான காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். ஏனென்றால் சூரிய பகவான் உங்கள் ராசியில் புகுந்துள்ளார். வேலைகள் இதுவரை ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இனிமேல் உங்களது காலம் நல்ல காலமாக அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9


 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.