Rahu Royal Luck: அடடே 2026.. ராகு புகுந்து விட்டார்.. 4 ராசிகள் வீட்டில் பணமழை கொட்டுமாம்.. என்ன நடக்கப்போகுது-let us see the zodiac signs that are going to fully enjoy the fortune of lord rahu - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Royal Luck: அடடே 2026.. ராகு புகுந்து விட்டார்.. 4 ராசிகள் வீட்டில் பணமழை கொட்டுமாம்.. என்ன நடக்கப்போகுது

Rahu Royal Luck: அடடே 2026.. ராகு புகுந்து விட்டார்.. 4 ராசிகள் வீட்டில் பணமழை கொட்டுமாம்.. என்ன நடக்கப்போகுது

Suriyakumar Jayabalan HT Tamil
Aug 29, 2024 12:57 PM IST

Lord Rahu: ராகு வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கிறார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கும் முன்னேற்றத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Rahu Royal Luck: அடடே 2026.. ராகு புகுந்து விட்டார்.. 4 ராசிகள் வீட்டில் பணமழை கொட்டுமாம்.. என்ன நடக்கப்போகுது
Rahu Royal Luck: அடடே 2026.. ராகு புகுந்து விட்டார்.. 4 ராசிகள் வீட்டில் பணமழை கொட்டுமாம்.. என்ன நடக்கப்போகுது

ராகு கேது இருவரும் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடுகள் ஒரே மாதிரி இருக்கும். ராகு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் ராகு பகவான் கடந்த அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் தனது பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில் ராகு வருகின்ற 2025 ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி மீன ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு வரும் 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்கின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பிடம் ஒரு சில ராசிகளுக்கும் முன்னேற்றத்தைப் பெற்றுத் தரப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேஷ ராசி

உங்கள் ராசிக்கு ராகு பகவான் பல விதமான பலன்களை கொடுக்கப் போகின்றார். நேர்மறையான மாற்றங்கள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கப் போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து உதவிகளும் உங்களுக்கு தடை இன்றி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். 

அனைத்து விருப்பங்களும் உங்களுக்கு நிறைவேறும். அரசாங்க உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ராகு பகவான் பொருளாதார ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தருவார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகர ராசி

ராகு பகவான் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான பணிகளில் இருந்து முன்னேற்றத்தை பெற்று தர போகின்றது. பணத்தை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடன் பிறந்தவர்களால் முன்னேற்றம் இருக்கும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் அனைத்தும் உங்களுக்கு நிவர்த்தி அடையும். 

திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்டு வந்தது சிக்கல்கள் அனைத்தும் குறையும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். அனைத்து வழிகளிலும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அற்புதமான சாதனைகள் செய்யக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.

கும்ப ராசி

ராகு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தர போகின்றது. வாழ்க்கையில் உங்களுக்கு அனைத்து விதமான வெற்றிகளும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை மற்றும் சக்கரவுகள் அதிகமாக கிடைக்கும். பண வரவில் உங்களுக்கு எந்த சிக்கல்களும் கிடைக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் அமைதி நிலவும். 

வாழ்க்கையில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். எதிர்பார்த்ததை விட உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கக்கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9