தமிழ் செய்திகள்  /  Astrology  /  Let Us See The Zodiac Signs That Are Going To Experience Rajyoga Due To The Combination Of Planets

Mass Money Luck: 100 வருட சதுர் கிரக யோகத்தில் நனைய போகின்ற 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 25, 2024 09:57 AM IST

கிரகங்களின் சேர்க்கையால் ராஜயோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.

ராசிபலன்
ராசிபலன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த ராஜ யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் தற்போது மகர ராசியில் சதுர் கிரக யோகம் உருவாகியுள்ளது. தற்போது மகர ராசியில் புதன் மற்றும் செவ்வாய் கிரகங்கள் பயணம் செய்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் மகர ராசியில் நுழைந்தார். இந்த சதுர் கிரக யோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மகர ராசி

 

உங்கள் ராசியில் முதல் வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இந்த யோகம் உருவாகியுள்ளது. உங்களுக்கு நல்ல மன உறுதி உண்டாகும். எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களால் உதவி கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானத்தில் உயர்வு உண்டாகும்.

கன்னி ராசி

 

உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சதுர் கிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel