தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. உங்கள் ராசி இருக்கா பாருங்க

தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. உங்கள் ராசி இருக்கா பாருங்க

Suriyakumar Jayabalan HT Tamil
May 15, 2024 03:53 PM IST

Venus: சுக்கிர பகவான் ரிஷப ராசி பயனுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மகிழ்ச்சியான சூழ்நிலைகளை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. உங்கள் ராசி இருக்கா பாருங்க
தலைகீழாக பணத்தில் குதிக்க போகும் ராசிகள்.. சுக்கிரன் கொட்டுகிறார்.. உங்கள் ராசி இருக்கா பாருங்க

சுக்கிர பகவான் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார். வருகின்ற மே 19ஆம் தேதி வரை மேஷ ராசியில் பயணம் செய்வார். அதற்குப் பிறகு அவருடைய சொந்தமான ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். சுக்கிர பகவான் ரிஷப ராசி பயனுமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மகிழ்ச்சியான சூழ்நிலைகளை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ரிஷப ராசி

 

உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்ய உள்ளார் இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். கண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். நிறைய செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நல்ல செய்தி உங்களை தேடி வரும் நண்பர்களால் உதவி கிடைக்கும். உறவினர்களால் யோகம் உண்டாகும். ஆடம்பர பொருட்களுக்காக அதிக செலவுகள் செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மிதுன ராசி

 

உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியை காண்பார்கள். திருமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் திருமணம் செய்ய விரும்பினால் உங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

கடக ராசி

 

உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மரியாதை கிடைக்கும். மற்றவர்களிடத்தில் கௌரவம் அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அனைத்து வகையிலும் வெற்றி கிடைக்கும். துணிச்சல் அதிகரிக்கப்படும். எடுக்க முடிவுகள் உங்களுக்கு நல்ல பாராட்டுகளை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்னேற்றம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் உங்களுக்கு அன்பு அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு ஏற்பட்ட வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel