தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சுக்ராதித்ய யோகம்..குரு..சூரியன்..சுக்கிரன் சேர்க்கை.. 18 மாதங்களுக்குப் பிறகு பணமழை பெறும் 3 ராசிகள்

சுக்ராதித்ய யோகம்..குரு..சூரியன்..சுக்கிரன் சேர்க்கை.. 18 மாதங்களுக்குப் பிறகு பணமழை பெறும் 3 ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 17, 2024 03:27 PM IST

சூரியன், குரு, சுக்கிரன் இவர்கள் மூவரும் இணைகின்ற காரணத்தினால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

சூரியன், குரு, சுக்கிரன்
சூரியன், குரு, சுக்கிரன்

நவகிரகங்கள் இருக்கும். இடத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் இடமாறும் பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் யோகங்கள் பல்வேறு விதமான தாக்கங்களை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் ஏப்ரல் 13ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் ராசியான மேஷ ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு தற்போது சூரிய பகவான் இணைந்துள்ளார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுத்திர பகவான் மேஷ ராசிக்குள் வருகிறார்.

இதனால் சூரியன் குரு சுக்கிரன் இவர்கள் மூவரும் இணைகின்ற காரணத்தினால் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம் ராசி

 

உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சுக்கிர அதித்திய யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கூட்டுத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல வெற்றியை பெற்று தரும் வெளியே சிக்கி கிடந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். உங்களது திட்டத்தில் முன்னேற்றம் உண்டாகும் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சிம்ம ராசி

 

உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிர அதித்திய யோகம் உருவாக்கியுள்ளது. இதனால் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மனதில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்விகள் சிறந்து விளங்குவார்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெற்று வெற்றி பெறுவார்கள்.

மேஷ ராசி

 

உங்கள் ராசியில் சுக்கிர அதித்திய யோகம் முதல் வீட்டில் உருவாக்கியது. இதனால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel